சனி, 29 டிசம்பர், 2007

மன்னர்--பராக்!!!!!!

அமைச்சர் : அழகு இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது சுத்த பொய் மன்னா.
மன்னர் : எப்படி அமைச்சரே!
அமைச்சர் : உங்களை சுற்றிக்கூடத்தான் எப்போதும் ஆபத்து இருக்கிறது..........

********************************************************************************************
அமைச்சர் : மன்னா தங்களை காண எதிரி நாட்டு மன்னன் படையுடன் வந்துள்ளான் ...
மன்னர் : அப்படியா அமைச்சரே! உடனே சுரங்கப்பாதை வழியை திறவுங்கள்
அமைச்சர் : அந்த கிராதகன் சுரங்கப்பாதை வழியாகத்தான் வருகிறான் மன்னா.................

வெள்ளி, 28 டிசம்பர், 2007

சிரிக்க.....சிந்திக்க.....

மனிதன் : முதலில் கோழி வந்ததா? முட்டை வந்ததா?

கோழி : எது வந்தாலும் நீங்கள் விட்டு வைக்க போவதில்லை..அப்புறம் என்ன ஆராய்ச்சி..

மனிதன் : ?????????

ஒரு இன்ச் சிரிக்கலாம்...........


ஒருவர்: உங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை வந்தால் நீங்க யார் பக்கம் இருப்பிங்க
மற்றவர்: பீரோவுக்கு பின் பக்கம்.

புலவர் : போரையே சந்திக்காத மன்னா!!!
மன்னர் : ஆஹா!! அற்புதம்.....
புலவர் : போர் வந்தால் நீ ஆயிடுவே மண்ணோடு மண்ணா!!!!
மன்னர் : ????????

திங்கள், 17 டிசம்பர், 2007

ஒஷோ--பக்கம்

வேலை முடிந்து வீடு திரும்பிய ஒருவன் வீட்டு கூரை மேல் ஒரு பெரிய குரங்கு அமர்ந்திருப்பதை பார்த்து அரண்டு போய் விட்டான். அதை அங்கிருந்து எப்படி துரத்துவது? என்கிற யோசனையுடன் வீட்டு கதவை சாத்திக் கொண்டவன் கண்ணில் பட்டது அந்த புத்தகம்.,
குரங்குகள் தொல்லையிலிருந்து தப்புவது எப்படி? என்ற அந்த புத்தகத்தை புரட்டியவனுக்கு அதற்கென தனி படை இருப்பதை அறிந்து அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழுத்த....அடுத்த சில நொடிகளில் வருகிறான் ஜார்ஜ் கூடவே
ஒரு பெரிய நாயுடன்.,
இதை மேலிருந்த குரங்கு வெகு அமைதியாய் பார்ர்த்து கொண்டிருக்கிறது.,
ஜார்ஜ் கையில் ஒரு வாழைப்பழமும் மற்றொரு கையில் பட்டாம்பூச்சியை பிடிக்கும் வலையும் வைத்திருக்க,
குரங்கு பிடிக்க எதற்கு இதெல்லாம் எதற்கு? என்று வினவுகிறார் வீட்டு உரிமையாளர்.,
இது மட்டுமில்லை என்று காருக்குள்ளிருந்து ஒரு பெரிய துப்பாக்கியை எடுக்கிறான் ஜார்ஜ்.,இதையும் அசட்டையாக
பார்த்து கொண்டிருக்கிறது குரங்கு.,
குழம்பி போன வீட்டுகாரருக்கு விளக்க துவங்குகிறான் ஜார்ஜ்.,"முதலில் இந்த வாழைப்பழத்தை எடுத்து அந்த குரங்குக்கு
வீசுவேன். அது சாவகசமாக உரித்து சாப்பிடும் போது கூரை மீது ஒரே ஜம்ப்.அவ்வளவுதான் சத்தமில்லாமல் அந்த குரங்கின்
பின்புறம் போய் விடுவேன்.,
"அப்புறம்" என்கிறார் வீட்டுகாரர்.
அது சாப்பிடும் நேரமாய் பார்த்து பின்னாலிருந்து ஒரே தள்ளு.அவ்வளவுதான் குரங்கு கூரையிலிருந்து உருண்டு கீழே
விழுந்து விடும்.,
"அப்புறம்" என்கிறார் ஆச்சரியம் தாளாமல் குரங்கு பிடிக்கக் கூப்பிட்டவர்.
அப்புறமென்ன அங்கத்தானே இருக்கு நம்ம கிளைமாக்ஸே.இந்த நாய் இருக்கே இது சாதாரண நாய் இல்லை.யார் கீழே
விழுந்தாலும் குதறி எடுக்க வேண்டியதை குறி வைத்து குதறி எடுத்து விடும் அப்படி ஒரு டிரெயினிங் குடுத்திருக்கோம் இந்த நாய்க்கு.
இது குரங்கிடம் எதை குதற வேண்டுமோ அதை குதறிக்கொண்டிருக்கும் வேலையாய் பார்த்து நீங்கள் சத்தமில்லாமல்
இந்த பட்டாம்பூச்சியை பிடிக்கும் வலையை வீசி ஒரே அமுக்காக அமுக்கிவிட வேண்டியதுதான் குரங்கை.
"எப்படி நம்ம திட்டம்" என்றான் ஜார்ஜ் கர்வத்துடன்.
கொஞ்சம் புரிந்த மாதிரியும் கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்க "எல்லாம் சரி ஆனா..... இந்த துப்பாக்கி எதுக்குன்னு
தான் புரியலை" என்றார் அப்பாவியாக
"என்ன துப்பாக்கி எதற்கா? ஒருவேளை அந்த குரங்கு விழாமல்.,அதற்கு பதிலாக நான் தப்பித்தவறி விழுந்துட்டேன்னா..
இந்த நாயை சுட்டுக் கொல்றதுக்குத்தான் என்றானம் ஜார்ஜ்.,


செவ்வாய், 27 நவம்பர், 2007

சத்தம் போடாதே!!!!!!!!!!!!!!!!!!

"எந்த ஒருவரையும் மதிப்பிடும் போது பலன்களின் அல்லது பின்னணிகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர அந்த நிமிடத்துச் செயல்களில் அல்ல".,
---திரு.லேனா அவர்கள்

நான் என் வலைபதிவை ஆரம்பித்த உடன் (நண்பர் பிகேபி அவர்களால் ஏற்பட்ட ஆர்வம் தான்) என்ன பயனுள்ள தகவலை பற்றி எழுதலாம் என யோசித்தால், எனக்கு முன்னரே பலர் பல நல்ல (கெட்ட)செய்திகளை வலைபதிவுகளாக போட்டு வருகின்றனர்.,எனவே நான் எனது தேடல்களை பன்முகமாக வியப்பித்துள்ளேன்.,எனது வலைபதிவிற்கான பெயர் காரணம் கண்டிப்பாக இட்லிவடையாரே.,

நான் அவர்களுடன் (பிகேபி,இட்லிவடையார்,பாலா,டோண்டு) ஒப்பிடும் உயரத்தில் இல்லை.,எனவே எனது கன்னி முயற்சிகள் எந்த பக்கம் வேண்டுமனாலும் இருக்கலாம்., சில சமயம் copy & paste ஆக கூட இருக்கலாம்.,

எனவே எதுவும் எப்போதும் நடக்கலாம்.,

எப்படியும் நடக்கலாம்.,

அன்புடன்.,

இட்லிசாம்பார்ர்.,


வியாழன், 22 நவம்பர், 2007

எதுவும் எப்போதும் நடக்கலாம்

எதுவும் எப்போதும் நடக்கலாம்.