வியாழன், 24 ஜனவரி, 2008

Billgates-க்கு ஒரு கடிதம்

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

நன்றி.....

பில் கேட்ஸும் & ஜோன்ஸும்


பில் கேட்ஸும் நம்ப ஜோன்ஸும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முடித்துவிட்டு பில்லுக்குப் பணம் ஜோன்ஸ் கொடுக்க, முகம் மலர்ந்தார் ஹோட்டல் முதலாளி. "ஜோன்ஸ் உங்களைப் பாத்து எத்தனை நாளாச்சு.. நல்லாருக்கீங்களா.." என விசாரித்தார். மற்ற பணியாளர்களும் வந்து நலம் விசாரிக்க, ஆச்சரியத்துடன் பார்த்த பில்கேட்ஸ் "ஜோன்ஸ் உங்களுக்குப் பல பேரைத் தெரியும் போலிருக்கே" என்றார்.

"நான் உலகத்திலேயே பிரபலமான மனிதன்" என்றார் ஜோன்ஸ். மேலும், "ஆயிரம் டாலர் பந்தயம் கட்டறேன். நீங்க யார்கிட்டே வேணும்னாலும் என்னக் கூட்டிக்கிட்டுப் போங்க. அவங்களுக்கு என்னத் தெரிஞ்சிருக்கும்" என சவால் விட, பில் கேட்ஸும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

இருவரும் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்க்கச் செல்ல, ஜனாதிபதி ஜோன்ஸைக் கட்டியணைத்துக் கொண்டு "நல்லாருக்கியா ஜோன்ஸ்?" என குசலம் விசாரித்தார்.

ஆச்சரியமான பில் கேட்ஸ், "ஓகே. இது உங்களுடைய அதிர்ஷ்டமாக இருக்கலாம். வாங்க... பிரிட்டிஷ் அரசி கிட்டப் போவோம்"

இருவரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல, வாசலில் நின்று கொண்டு வரவேற்றார் அரசி. "வாங்க ஜோன்ஸ்.. நல்ல சுகமா, பிரயாணம் எப்படி இருந்தது?"

அதிர்ந்து போன பில் கேட்ஸ், “ஜோன்ஸ்.. இது ஆச்சரியமான விஷயம்தான். இறுதியாக போப்பாண்டவர்கிட்ட போகலாம்"

ஜோன்ஸும், பில் கேட்ஸும் வாடிகன் சென்றனர். போப்பாண்டவர் மாளிகை உச்சியில் இருந்து கொண்டு கீழிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த ஜோன்ஸ் பில் கேட்ஸிடம், "நான் இப்போது மேலே சென்று போப்பிடம் பேசுகிறேன், நீங்கள் இங்கிருந்தே பாருங்கள்" என்று கூறிவிட்டு மேலே சென்றார்.

'ஆ'வென வாய் பிளந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த பில்கேட்ஸிடம் பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் எதையோ கூற மயங்கி விழுந்தார் பில் கேட்ஸ். ஜோன்ஸ் மேலிருந்த பதட்டத்துடன் கீழே வந்தார். "என்னாச்சு பில்?" என அவரை எழுப்ப, மயக்கம் தெளிந்தபடி "உண்மையிலே நீங்கள்தான் உலகின் பிரபலம் நம்பர் 1" என்றார் கேட்ஸ்.

பெருமையுடன் சிரித்த ஜோன்ஸிடம் "நான் மயங்கி விழுந்ததுக்குக் காரணம் கேட்கலியே" என்ற பில், "என் பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் கேட்டானே ஒரு கேள்வி, மேலே ஜோன்ஸ் நிற்கிறார்.. தெரிகிறது, அதென்ன பக்கத்தில் வெள்ளை அங்கியுடன் ஒருவர். அவர் யாரென்று தெரிந்தால் சொல்லுங்களேன். அப்படினு கேட்டுப்புட்டான்" என்ற பில் மீண்டும் மயங்கி விழுந்தார்.

கிருஷ்ணாவதாரத்தில் 'டவுட்' டுங்கோ!!


ஆசிரியர் மாணவர்களுக்குக் கிருஷ்ண பகவானின் அவதார மகிமையைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

"கம்சனுடைய தங்கைக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்லும். இது விதி என அசரீரி கூறுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரு சிறையில் அடைக்கிறான்.

முதல் குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை விஷம் கொடுத்துக் கொல்கிறான். சிறிது காலம் கழித்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை மலை உச்சியிலிருந்து தூக்கிப்போட்டுக் கொன்றுவிடுகிறான். மேலும் சில காலம் கழித்து மூன்றாவது குழந்தை பிறக்கிறது. அதை..." ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டே போக, ஒரு மாணவன் எழுந்து கேட்கிறான்.

"சார் கிருஷ்ணாவதாரத்தில ஒரு சந்தேகம்"

"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

"சார்! தங்கைக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அப்படிங்கறது கம்சனுக்குத் தெரியும்தானே?"

"ஆமா! அதிலென்ன சந்தேகம்"?

"அப்புறம் எதுக்கு சார் இந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரே சிறைக்குள்ள அடைக்கிறான். அவனுக்கு வெவரம் பத்தாதோ?"

புதன், 23 ஜனவரி, 2008

உயர்ந்த செய்தி...................

அதிக உயரத்தில் இருந்து விழுந்து பிழைத்த சாதனைக்கு சொந்தக்காரர் வெஷ்னா உலோவிக். 1972-ம் வருடம் அவர் பணிபுரிந்த யுகோஷ்லோவிய விமானம் ஒரு குண்டு வெடிப்பில் சிதற 33,316 அடி உயரத்திலிருந்து விழுந்து பிழைத்தார் இவர்.

புதன், 9 ஜனவரி, 2008

அமெரிக்க குசும்பு............

எதேச்சையாக பார் ஒன்றில் நுழைந்த ஒருவனுக்கு அதிர்ச்சி.உற்சாக பானத்தில் மிதந்து கொண்டிருந்த இரு ஆசாமிகளும் அசப்பில் ஜார்ஜ் புஷ்சை போலவும் அவரது பாதுகாப்பு அமைச்சரை போலவும் தெரிய வெயிட்டரிடம் அது அவர்கள்தானா என்று விசாரிக்க,
அதுகளே! என்றார் வெயிட்டர்.
உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்த அவன்.
"ஹலோ புஷ்.....நீங்கள் எதைப்பற்றி இவ்வளவு சீரியசாக விவாதித்துக் கொண்டு இருக்கிறிர்கள்" என்றான்.
"நாங்கள் அடுத்து வரப்போகும் மூன்றாம் உலகப்போரைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்" என்றது புஷ்
"அதில் என்ன செய்வதாக உத்தேசம்"என்றான் அவன்.
"இந்த முறை ஒரு கோடி ஈராக்கியர்களையும் ஒரு அழகியையும் கொல்லப்போகிறோம்"என்றார் புஷ்.
உடனே உணர்ச்சிவசப்பட்ட அவன்"அந்த அழகியை எதற்காக கொல்லப்போகிறிர்கள்"என்றான் கோபமாக.
"டேய் மச்சான்! நான் சொல்லலை.இவனுங்க அந்த ஒரு பொம்பளையை பத்தி மட்டும்தான் கவலை படுவானுங்க,ஒரு
கோடி ஈராக்கியர்களை பத்தி கேக்க மாட்டானுங்க" என்றாராம் புஷ் தனது பாதுகாப்பு அமைச்சரிடம்.