திங்கள், 20 செப்டம்பர், 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க - Software

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். "சரி" இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? "MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்" "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?" "இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். "அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். "இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். "CR-னா?" "Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?" "ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" "முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு." "அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது." "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார். "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம்.எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை." "பாவம்பா" "ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்." "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" "ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." "நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!" "இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" "வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?" "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி." "ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?" "அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க" "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" "கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்." "எப்படி?" "நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" "அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்." "அப்புறம்?" "ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." "அப்புறம்?" "அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும். "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

புதன், 25 ஆகஸ்ட், 2010

தன்னம்பிக்கை

ஒரு நாய் புலனாய்வு நிறுவனம் ஒன்றில் வேலை கேட்டு போகுது.அதிகாரி கம்ப்யுட்டரில் 60 வார்த்தைகள் அடிக்க சொன்னார். உடனே நாய் மின்னல் வேகத்தில் 80 வார்த்தைகள் அடித்தது. குட் என்ற அதிகாரி கம்ப்யுட்டரில் லேட்டஷ்ட் கோர்ஷ் என்ன பண்ணி இருகிறாய் என்று கேட்டார். உடனே கையில் இருந்த அத்தனை சர்ட்டிஃபிகேரட்டையும் காட்டியது. குட் என பாராட்டிய அதிகாரி உன் தன்னம்பிக்கைய்யை எப்படி நிருபிக்கப் போற என்றார். உடனே அமைதியாய் நாய் எழுந்து கத்தியது "மியாவ்! மியாவ்! மியாவ்!

புதன், 21 ஜூலை, 2010

மழை

வானத்திலே திருவிழா வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள் இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம் மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம் தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை ஆண்டு தோறும் வாடிக்கை"

வியாழன், 24 ஜனவரி, 2008

Billgates-க்கு ஒரு கடிதம்

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

நன்றி.....

பில் கேட்ஸும் & ஜோன்ஸும்


பில் கேட்ஸும் நம்ப ஜோன்ஸும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முடித்துவிட்டு பில்லுக்குப் பணம் ஜோன்ஸ் கொடுக்க, முகம் மலர்ந்தார் ஹோட்டல் முதலாளி. "ஜோன்ஸ் உங்களைப் பாத்து எத்தனை நாளாச்சு.. நல்லாருக்கீங்களா.." என விசாரித்தார். மற்ற பணியாளர்களும் வந்து நலம் விசாரிக்க, ஆச்சரியத்துடன் பார்த்த பில்கேட்ஸ் "ஜோன்ஸ் உங்களுக்குப் பல பேரைத் தெரியும் போலிருக்கே" என்றார்.

"நான் உலகத்திலேயே பிரபலமான மனிதன்" என்றார் ஜோன்ஸ். மேலும், "ஆயிரம் டாலர் பந்தயம் கட்டறேன். நீங்க யார்கிட்டே வேணும்னாலும் என்னக் கூட்டிக்கிட்டுப் போங்க. அவங்களுக்கு என்னத் தெரிஞ்சிருக்கும்" என சவால் விட, பில் கேட்ஸும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

இருவரும் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்க்கச் செல்ல, ஜனாதிபதி ஜோன்ஸைக் கட்டியணைத்துக் கொண்டு "நல்லாருக்கியா ஜோன்ஸ்?" என குசலம் விசாரித்தார்.

ஆச்சரியமான பில் கேட்ஸ், "ஓகே. இது உங்களுடைய அதிர்ஷ்டமாக இருக்கலாம். வாங்க... பிரிட்டிஷ் அரசி கிட்டப் போவோம்"

இருவரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல, வாசலில் நின்று கொண்டு வரவேற்றார் அரசி. "வாங்க ஜோன்ஸ்.. நல்ல சுகமா, பிரயாணம் எப்படி இருந்தது?"

அதிர்ந்து போன பில் கேட்ஸ், “ஜோன்ஸ்.. இது ஆச்சரியமான விஷயம்தான். இறுதியாக போப்பாண்டவர்கிட்ட போகலாம்"

ஜோன்ஸும், பில் கேட்ஸும் வாடிகன் சென்றனர். போப்பாண்டவர் மாளிகை உச்சியில் இருந்து கொண்டு கீழிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த ஜோன்ஸ் பில் கேட்ஸிடம், "நான் இப்போது மேலே சென்று போப்பிடம் பேசுகிறேன், நீங்கள் இங்கிருந்தே பாருங்கள்" என்று கூறிவிட்டு மேலே சென்றார்.

'ஆ'வென வாய் பிளந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த பில்கேட்ஸிடம் பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் எதையோ கூற மயங்கி விழுந்தார் பில் கேட்ஸ். ஜோன்ஸ் மேலிருந்த பதட்டத்துடன் கீழே வந்தார். "என்னாச்சு பில்?" என அவரை எழுப்ப, மயக்கம் தெளிந்தபடி "உண்மையிலே நீங்கள்தான் உலகின் பிரபலம் நம்பர் 1" என்றார் கேட்ஸ்.

பெருமையுடன் சிரித்த ஜோன்ஸிடம் "நான் மயங்கி விழுந்ததுக்குக் காரணம் கேட்கலியே" என்ற பில், "என் பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் கேட்டானே ஒரு கேள்வி, மேலே ஜோன்ஸ் நிற்கிறார்.. தெரிகிறது, அதென்ன பக்கத்தில் வெள்ளை அங்கியுடன் ஒருவர். அவர் யாரென்று தெரிந்தால் சொல்லுங்களேன். அப்படினு கேட்டுப்புட்டான்" என்ற பில் மீண்டும் மயங்கி விழுந்தார்.

கிருஷ்ணாவதாரத்தில் 'டவுட்' டுங்கோ!!


ஆசிரியர் மாணவர்களுக்குக் கிருஷ்ண பகவானின் அவதார மகிமையைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

"கம்சனுடைய தங்கைக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்லும். இது விதி என அசரீரி கூறுகிறது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரு சிறையில் அடைக்கிறான்.

முதல் குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை விஷம் கொடுத்துக் கொல்கிறான். சிறிது காலம் கழித்து இரண்டாவது குழந்தை பிறக்கிறது. கம்சன் அதை மலை உச்சியிலிருந்து தூக்கிப்போட்டுக் கொன்றுவிடுகிறான். மேலும் சில காலம் கழித்து மூன்றாவது குழந்தை பிறக்கிறது. அதை..." ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டே போக, ஒரு மாணவன் எழுந்து கேட்கிறான்.

"சார் கிருஷ்ணாவதாரத்தில ஒரு சந்தேகம்"

"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

"சார்! தங்கைக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அப்படிங்கறது கம்சனுக்குத் தெரியும்தானே?"

"ஆமா! அதிலென்ன சந்தேகம்"?

"அப்புறம் எதுக்கு சார் இந்த கம்சன் வாசுதேவனையும், தேவகியையும் ஒரே சிறைக்குள்ள அடைக்கிறான். அவனுக்கு வெவரம் பத்தாதோ?"

புதன், 23 ஜனவரி, 2008

உயர்ந்த செய்தி...................

அதிக உயரத்தில் இருந்து விழுந்து பிழைத்த சாதனைக்கு சொந்தக்காரர் வெஷ்னா உலோவிக். 1972-ம் வருடம் அவர் பணிபுரிந்த யுகோஷ்லோவிய விமானம் ஒரு குண்டு வெடிப்பில் சிதற 33,316 அடி உயரத்திலிருந்து விழுந்து பிழைத்தார் இவர்.